புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் : கடற்தொழில் நீரியல் வள அமைச்சராக பொறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா!
Friday, November 22nd, 2019ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் நீரியல் வள அமைச்சராக பொறுப்பெற்றுக் கொண்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டு சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
அதற்கமைய –
- நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
- நீதி மறுசீரமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
- சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
- கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுகாதார மற்றும் சுதேச மருத்துவம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
- தகவல் தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புத்தாக்கல் அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மஹாவலி கமத் தொழில், நீர்பாசனத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சரா சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
- கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக டளஸ் அலகபெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிறிய மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு, தொழில் வழங்கல் மேம்பாட்டு அமைச்சராக விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
- பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள், காணி மற்றும் காணி விவகார அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதி வேளாண்மை அமைச்சராக டொக்டர் ரமேஷ் பதிரன நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருட சிறப்புப் வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
கடலோரங்களில் பிதிர்க் கடன்களை செலுத்தலாம் – அமைச்சரவையை இணங்கச் செய்தார் அமைச்சர் டக்ளஸ்!
யாழ். கடல் நீரேரியிலும் உருவாகிறது கடலட்டைப் பண்ணை!
|
|