பனை தென்னைவளம் சார் தொழில்துறை மீண்டும் புத்துயிர்பெறும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, October 21st, 2019


வடக்கு மக்களின் வாழ்வாதாரங்களுடன்  பெரும் பங்கு வகிக்கும் பனை தென்னைவளம் சார் தொழில்துறையில் கடந்த ஆட்சியில் நாம் புதிய பரிமாற்றங்களுடன் பல செயற்றிட்டங்களை உருவாக்கி காட்டியிருந்தோம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களால் அது சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படாமையால் அத்துறை சார் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் வீழ்ச்சிகண்டுள்ளது.  

இந்த வீழ்ச்சியிலிருந்து அந்த மக்களது வாழ்வாதாரம் மீண்டும் தூக்கி நிறுத்தவேண்டுமானால் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமது மக்கள் கோட்டபய ராஜபக்சவை வெற்றிபெற செய்வதற்கு பங்காளிகளாவதன் ஊடாக மீண்டும் அத்துறை சார் மக்களின் வாழ்வியலை தூக்கி நிறுத்தி ஓர் ஒளிமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  இன்றையதினம் யாழ் மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவு சங்க சமாசங்களின் பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் நாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது அரசில் அமைச்சராக இருந்தபோது அவருடன் நாம் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக பல்வேறு நலத்திட்டங்களை குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாது பனை தெனைவள சார் தொழில் துறையை மேற்கொள்ளும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி பலபுதிய நலத்திட்டங்களை உருவாக்கி தந்திருந்திருக்கின்றோம்.

ஆனாலும் இடை நடுவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக அந்த திட்டங்களை தொடர்ந்தும் எம்மால் முன்னெடுக்க முடியாது போனாது. இதனால் இத் தொழில் துறைசார் மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆனால் அந்த மக்களின் வாழ்வில் மறுபடியும் நிரந்தரமான பொருளாதார வருவாய்களை உருவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை எமது மக்கள் இம்முறை சரியாக பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகின்றேன் அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி ஆதரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஶ்ரீலங்கா பெரமுன கட்சி சார்பில் தாமரை மொட்டு சின்னத்தில் முன்னிறுத்தியுள்ள வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றியில் நீங்களும் பங்காளிகளாக வேண்டும். அதற்காக நீங்கள் எனது வழிமுறைநோக்கி அணிதிரளுங்கள் நாம் செய்வோம் செய்விப்போம் என அவர்’ மேலும் தெரிவித்தார்.

Related posts:

அரசியல் பலம் அதிகரிக்கும்போ துதான் மக்களுக்கான சேவைகள் முழுமைபெறும் - டக்ளஸ் தேவானந்தா!
கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களே காரணம் - செயலாளர் நாயகம் டக்...
பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க...