நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, September 18th, 2019


வாணிப கப்பற்தொழில் குறித்து இன்று கதைக்கின்ற இந்த நாட்டில், அத்தொழிற்துறை சார்ந்த மிக முக்கியமான துறைமுகமாக மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தை, நெல் மூட்டைகள் களஞ்சியப்படுத்துகின்ற கட்டிடமாகப் பயன்படுத்திய வரலாறும் இருக்கின்றது.

இந்த நெல் மூட்டை களஞ்சியப் படுத்தல் செயற்பாடு காரணமாக எலிகள் அரித்து, சேதமாகியும், அழிந்தும் போன அம்பாந்தோட்டை துறைமுகத்தின் சொத்துகளுக்கு இழப்பீடுகளைச் செலுத்த வேண்டிய சுமையும் இந்த நாட்டு மக்களுக்கே வந்து சேர்ந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்’ இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இத்தகையதொரு நிலையில்தான் திருகோணமலை துறைமுகத்தை வெளிநாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கின்ற திட்டமும் திரைமறைவில் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

சர்வதேச கடல்சார் அமைப்பின் நியதிச் சட்டத்திற்கு அமைவாக வாணிப கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.

இலங்கையுடன் தொடர்புடைய வாணிபத் துறை குறித்து ஆராய்கின்றபோது, கி. பி. 6ஆம் நூற்றாண்டில் இந்த நாட்டுக்கு வருகை தந்திருந்த சோபேடர் எனும் கிரேக்க நாட்டவர் அறிந்து கொண்டிருந்த விடயங்களின் அடிப்படையில், கொஸ்மஸ் எனும் கிரேக்க நாட்டவரால் எழுதப்பட்ட நாட்டு விபரங்களில், 06ஆம் நூற்றாண்டின்போது, இலங்கையானது மேலைத்தேய மற்றும் கிழக்கு நாடுகளிடையே பிரதான சர்வதேச வர்த்தக மத்திய நிலையமாக இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய பெருமைவாய்ந்த இந்த நாட்டின் மிகவும் முக்கியத்துவமிக்க துறைமுகங்கள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்கின்றபோது, இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? என்பது தெட்டத் தெளிவாகவே விளங்குகின்றது.

இலங்கையானது இந்து சமுத்திரத்தில் மிக முக்கியமானதொரு வாணிப கேந்திர மையம் என்றே ரோம, அராபிய மற்றும் சீன புராண குறிப்புகளிலிருந்து தெரிய வருகின்றது.

இதற்குக் காரணம், இலங்கையில் வடக்குப் பகுதியின் இயற்கையான அமைவிடமும், தென்னிந்தியாவிலிருந்து மிக இலகுவாக இந்த நாட்டில் அப்பகுதி ஊடாக தரையிறங்குவதற்கான வசதியுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

நந்திக் கடல் நீரேரி புனரமைக்க ப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள்- டக்ளஸ் தேவானந்தா
மக்களின் நம்பிக்கையை எவரும் வென்றெடுக்கவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவ...
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை...

தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் அக்கறை காட்டும் வட மாகாண சபை அவற்றைச் செயற்படுத்த முயல...
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வு இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்திது...
வன்னி மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது – அமைச்சர...