நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உண்டா? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, August 6th, 2019

ஜனாதிபதியின் ‘உத்தியோகப் பணி’ – நில மெஹெவர’ நடமாடும் சேவையானது கடந்த வருடம் (2018) செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வின்போது பொது மக்கள் தேசிய அடையாள அட்டையைப் பெறுவது இலவசமாகும் என்றும் அடையாள அட்டைக்கான செலவுகளை தனது அமைச்சு ஆட்பதிவு திணைக்களத்துக்கு வழங்கும் என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் அறிவிக்கப் பட்டதாகவும் இதனை நம்பிய சாவகச்சேரி ஊர்காவற்துறை சங்கானை பருத்தித்துறை நெடுந்தீவு காரைநகர் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழ்கின்ற எமது மக்களில் பலரும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து தற்போது கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஆகின்ற நிலையிலும் இதுவரையில் தேசிய அடையாள அட்டைகள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இந்த வகையில் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவினில் மாத்திரம் சுமார் 700 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் ஏனைய ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தலா 500 பேர் வரையில் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இதே நேரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் கோப்பாய் தெல்லிப்பழை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்படி நடமாடும் சேவை இடம்பெற்றிருந்தபோது பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளிடமிருந்து பணம் பெறப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அடடைகளுக்கான செலவுகள் செலுத்தப்பட்டதாகவும்  இந்த விண்ணப்பதாரிகளுக்;குரிய தேசிய அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்று விட்டதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.

எனவே ஜனாதிபதி நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள சாவகச்சேரி ஊர்காவற்துறை சங்கானை பருத்தித்துறை நெடுந்தீவு காரைநகர் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை இலவசமாக வழங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உண்டா?

இலவசமாக வழங்கப்படும் என  அளித்த வாக்குறுதிக்கமையவே அப்பகுதி மக்கள் செலவுகளுக்கான பணத்தை செலுத்தியிராத நிலை ஏற்பட்டுள்ளது என்பதால், இவற்றை இலவசமாக வழங்குவதே சிறந்த ஏற்பாடாக இருக்கும் என்ற நிலையில் தற்போது ஆட்பதிவுத் திணைக்களமும் தங்களது அமைச்சின் கீழேயே இருப்பதால், இது தொடர்பில் சாதகமான நடவடிக்கையை விரைந்து எடுக்க முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

(நாடாளுமன்றில் நடைபெற்ற 237/2 கேள்வி நேரத்தின் போது உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களிடம்..)

Related posts: