தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 23rd, 2019


வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்று ஐந்து வருடங்கள் கடந்தபோதும் இடமாற்றம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கான இடமாற்றம் தொடர்பில் நியாயம் பெற்றுத் தருமாறு கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தபின் கருத்து  தெரிவித்த அமைச்சர் –

தமிழ் மக்களின் இத்தனை அழிவுகளுக்கும் பின்னடைவுகளுக்கும் இதர தமிழ் அரசியல் தலைமைகளைப் போல சில தமிழ் ஊடகங்களும் காரணமாக இருந்துள்ளன.

ஆயுத வழியில் தீர்வு சாத்தியமில்லை என 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் தமிழ் தரப்பினர் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் யுத்தம் நடந்தால் அழிவுகள் வரும் என தெரிந்தும் அதை தொடர்வதற்கு வழிவகை செய்தது மக்களின் தவறு என்றே நான் கருதுகின்றேன்.

இந்த தவறை தமிழ் மக்கள் இன்றும் போலி தமிழ் அரசியல்வாதிகளின் போலிப் பிரசாரங்களின் பின்னால் சென்று தவறான முடிவுகளையும் தவறான தெரிவுகளையும் செய்வதனூடாக மேற்கொள்கின்றனர்.

தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதை நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது. அதை முன்னெடுப்பவர்களையும் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதும் கிடையாது.

நாம் எமது மக்களை பாதுகாத்து அவர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றே எண்ணிவருகின்றோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் மக்களிடம் என்னை நம்புங்கள் நான் செய்வேன் செய்விப்பேன் என்றே கூறி கோட்டபய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தேன். ஆனால் நீங்கள் ஆற்றிலே போட்டுவிட்டு இன்று குளத்தில் தேடுகின்றீர்கள்.

அந்தவகையில் நீங்கள் எதிர்பார்ப்பதை உடனடியாக என்னால் செய்து கொடுக்க முடியாதுவிட்டாலும் அதுதொடர்பில் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிக்கின்றேன் என்றார்

Related posts:

மகேஸ்வரன் கொலை: நீதிமன்ற தீர்ப்பு அவமதிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
ஜா எலை மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்...