சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 20th, 2019


மக்களைப் பாதிக்கும் அனைத்துவித சட்டவிரோத செயற்பாடுகளும் விரைவில் கட்டுப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க விரைவில் சமூக அக்கறையாளர்களை அழைத்து ஆராயவுள்ளேன். இதாற்காக அமைச்சரவை அனுமதியையும் பெற்றுள்ளேன்என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூல அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது மக்களை துன்புறுத்தும் வகையில் பல சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சட்டவிரேத மணல் அகழ்வு போதைப்பொருள் விற்பனை வாள்வெட்டு போன்றவை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. இவை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையே காணப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துமாறு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில் அதிகரித்துச் செல்லும் இந்த சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மிகவிரைவில்  அனைத்து வகையான முயற்சிகளையும் முன்னெடுக்கப்படும் என்றார்.

Related posts:

நுண்கடன்கள் எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...
கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...