கட்சிக் கொள்கையுடன் எமது உறுப்பினர்கள் வேலைத்திட்டங்ளை முன்னெடுத்து வருகின்றனர் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!( வீடியோ இணைப்பு)

Wednesday, October 16th, 2019

எமது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கட்சியின் கொள்கையை முன்னிறுத்தி அதன்வழியே தத்தமது வேலைத்திட்டகளை முன்னெடுத்து வருகின்றனர். காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களது பொய்யான பிரசாரங்கள் எமது கட்சியின் அரசியல் முன்னெடுப்புகளையோ அன்றி வேலைத்திட்டங்களையோ தடுத்துவிட முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எமது கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பெரமுன கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கோட்டபய ராஜபக்சசை ஆதரித்து எமது கட்சி பிரசாரங்களை முன்னெடுத்த வருகின்றது.

இதில் எமது கட்சியின் 98 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது பங்கு அதிகமாக இருப்பதால் அவர்களை நோக்கி பொய்யான பிரசாரங்களை சில ஊடகங்கள் மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இது வழமையான பொய்யான ஒரு செய்திதான். தேர்தல் என்று வந்தால் இவ்வாறான திட்டமிட்ட செய்திகளை காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்கள் எம்மீது வெளியிடுவது வழமைதான். ஆனால் எமது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபயவின் வெற்றியை உறுதி செய்வதற்காக தத்தமது  பகுதிகளில் பிரசார வேலைகளை முன்னெடுத்துவருகின்றனர் என தெரிவித்தார்.

இன்றையதினம் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த  மாவட்டங்களின் நிர்வாக செயலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சந்தித்து சமகால அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசார முன்னெடுப்புகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

இதனிடையே மாங்குளம் யுவசக்தி பெண்கள் அமைப்பினரின் வேண்டுதலுங்கு இணங்க அவர்களைச் சந்தித்தார் செயலாலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த அமைப்பினரது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

Related posts:


தீராப் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம்...
பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
வடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!