கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நிலை ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, August 1st, 2019

கடற்றொழிலாளர்களுக்கு பல நாள்கள் கடலில் தொழில் செய்யக் கூடிய 55 அடி நீளமான படகுகள் 50 வீத மானிய விலையில் வழங்கப்படுமென ஏற்கனவே வரவு – செலவுத்; திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி படகுகளை பெற விரும்புகின்ற கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைப்புகளை பதிவு செய்கின்ற ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தப் படகுகளைப் பெற்றுக் கொள்கின்றபோது, படகு விலையில் 50 வீதத்தை பயனாளிகள் வழங்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

இதன் பிரகாரம், குளிரூட்டி, ராடார் உள்ளிட்ட ஒரு பலநாள் படகின் விலை 25 மில்லியன் ரூபா எனக் கூறப்படுகின்ற நிலையில், இதைவிடக் குறைந்த விலையில் மேற்படி படகுகினைப் பெற முடியும் என படகு கட்டும்  தொழிற்சாலைகள் தெவிப்பதாகவும், அத் தொழிற்சாலைகளின் தரவுகளின் அடிப்படையில், படகின் ஒரு அடி நீளத்திந்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம், 55 அடிக்கு 82 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், இயந்திரத்திற்கு 53 இலட்சம் ரூபாவும், மேலதிக சாதனங்களுக்கு 25 இலட்ச ரூபாவுமாக மொத்தமாக சுமார் 16.5 மில்லியன் ரூபாவே செலவாகுமென்றும் மேலும், பல படகுகளை கொள்வனவு செய்கின்ற நிலையில், விலை மேலும் குறையுமென்றும்  வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பார்க்கின்றபோது, மானிய விலை எனக் கூறப்பட்டு, படகுக்குரிய அதிகபட்ச முழுத் தொகையும் பயனாளிகளிடம் இருந்தே அரசாங்கத்தால் பெறப்படுவதாகவும் மேற்படி சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தையும் கௌரவ அமைச்சர் பி. ஹெரிசன் அவர்களிடம் இருந்து எதிர்பாக்கின்றேன்.

மேற்படி சங்கங்கள் குறிப்பிடுகின்ற விலைக்கும், அரசாங்கம் குறிப்பிடுகின்ற விலைக்கும் இடையில் வித்தியாசம் ஏற்படுவதற்கு வேறேதும் காரணங்கள் உண்டா? 

மேற்படி கடற்றொழிலாளர் சங்கங்கள் குறிப்படுகின்ற ஒரு, பல நாள்கள் படகின் விலையை ஆராய்ந்து பார்த்து, அத்தகைய விலைக்கு மேற்படி படகினை கொள்வனவு செய்ய முடிந்தால், அந்த விலைக்கு பயனாளிகளுக்கு பல நாள்கள் படகுகளை வழங்குவது தொடர்பில் ஆராய முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 27ஃ2 கேளிவி நேரத்தின்போது விவசாய, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ, கால் நடைகள் அபிவிருத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பி. ஹெரிசன் அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: