கடமையை பொறுப்பேற்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச : டக்ளஸ் எம்.பி நேரில் வாழ்த்து!

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்ததுடன் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அலுவலகத்துக்கு சென்றார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததடன் புதிய ஜனாதிபதிக்கு தமது வாழ்த்தக்களையும் தெரிவித்துள்ளனர்.


Related posts:
அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவ...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரத்தை அனுமதிக்க கூடாது - அமைச்சர் டகளஸிற்கு ...
பேலியாகொடை மீன் சந்தையின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் அதீத கவனம்!
|
|