இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகாக்கும் வகையில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Sunday, December 8th, 2019


இலங்கை மற்றும் இந்திய கடல்தொழிலாளர்கள் இடையே நடைபெற்றுவந்த நிலையில் இடை நிறுத்தப்பட்ட பேச்சுக்கள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு இருநாட்டு கடல்தொழிலாளர்களும்  எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண விரைவில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கடல் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்புன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கலையில் –

நீண்டகாலமாக தீர்வுகள் காணப்படாது இருந்துவரும் குறித்த கடல் தொழில்சார் தொழிலாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காக கடந்த காலங்களிலும் நான் கடல்தொழில் அமைச்சராக இல்லாது விடினும் இருநாட்டு கடல் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என பல முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்துள்ளேன்.

தற்போது எனக்கு இலங்கை நாட்டின் அமைச்சரவை அந்தஸ்துள்ள பெரும் அமைச்சானா கடல்தொழல் மற்றும் நீரியல் வள மூலதன அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சைக் கொண்டு நான் முடியுமான அளவு இலங்கை இந்திய மீனவர்களுக்கு நன்மை தரும் வகையில் தீர்வுகாண ஈயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன.

அந்தவகையில் வரும் ஆண்டு முற்பகுதியில் இருநாட்டு துறைசார் தரப்பினருடனும் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளேன். அதற்கான முயற்சிகள் தற்போது நடைபெறுகின்றது. அத்துடன் இந்திய நாட்டு மீனவர்கள் தடைசெய்யப்பட்ட கடல் தொழில் உபகரணங்கள் பாவிப்பதை விடுவிக்க வேண்டும் என்பதுடன் கடல் சார் உயிரினங்களின் பாதுகாப்பையும் இருநாட்டு கடல் தொழிலாளர்களும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இருநாட்டு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்ட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.

Related posts:


மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - நாடளுமன்றத்தில் ட...
இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுவழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!