இனிவரும் காலம் கனிதரும் காலமாகட்டும்! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 25th, 2019


இருண்ட யுகத்தில் இருந்து எழுந்த ஒரு ஒளிச்சூரியனின்  வருகையைப்போல் பிறந்திருக்கும் நத்தார் தினம் இனி வரும் காலத்தை நல்ல கனிதரும் காலாமாக மாற்றிடலாம் என்ற புதிய நம்பிக்கையை தந்திருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நத்தார்தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில்,..

உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் யேசு பிரான் பிறப்பெடுத்த இத்தினத்தை உலகெங்கும் வாழும் மக்களுடன் இணைந்து எமது மக்களும் நத்தார் தினமாக நம்பிக்கையோடு கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.

நீடித்த துயர்களை எமது மக்கள் எதிர்கொண்ட போதும் நான் எமது மக்களுடனேயே என்றும் வாழ்ந்து வருகின்றேன்.

எமது கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை.  வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நாம் சொல்லும் கருத்துக்களும் வழிமுறைகளும் ஒரு போதும் ஒழிந்து போகாது. எமது தீர்க்கதரிசனங்களும், சாத்தியமான எமது வழிமுறைகளுமே இன்று வெல்லப்பட்டு வருகின்றன.

நிரந்தர சமாதானம், நீடித்த சமவுரிமை,  வரலாறெங்கும் துயரச்சிலுவை  சுமந்த எமது மக்களுக்கு ஒரு நியாயத் தீர்ப்பு.

நீதியற்றை சட்ட விரோதச்செயல்கள், வன்முறைகள் மற்றும் அவலங்கள் நடக்காத,  அழுகுரல்கள் கேட்காத, பஞ்சம், பசி, பட்டினி இல்லாத ஓர் புனித பூமி! இவைகளே  அனைவரினதும் ஆழ் மன விருப்பங்கள்.

இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி.!..  எமது நிலங்கள் எமக்கே சொந்தம்!! எவரையும் எவரும் அடிமைகள் என்று கொள்ளாத புதியதொரு சமாதான இராட்சியத்தையே நாம் விரும்புகின்றோம். தீயவர்களை வெறுத்து, என்றும் உங்களுடன் இருந்து  உங்களுக்காக உழைப்பவர்களின் நியாயத்தை நிலைப்படுத்த முன்வாருங்கள்!

தவறான தெரிவுகளை நிறுத்தி பயன் தருவோரை பலப்படுத்துங்கள்! நீங்கள் உண்மையானவர்களை விசுவாசித்தால் நியாயம் தண்ணீரைப்போலவும்,  நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டோடி வரும்..

சர்ப்பத்தை போல் விழிப்புடனும்,. புறாக்காளைப்போல்  கபடமின்றியும் நீங்கள் இருந்து,.. இனிவரும் காலத்தை நல்ல கனிதரும் காலமாக்குங்கள்!

நிரந்தர சமாதானமும் நித்திய ஒளி வீச்சும் வேண்டி  உங்களுடனேயே வாழ்த்து வரும் எம்மை பலப்படுத்துங்கள்!.. எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும்,.. உங்கள் இல்லங்களின் வாசல்தோறும், நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசவும்,..சமவுரிமை மலரவும் நாம் தொடர்ந்தும் உழைப்போம்.

உங்கள் அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்!

அன்பும் கருணையும் அவனி முழுவதையும் ஆழட்டும்!

அறம் வெல்லும்! அநீதி தோற்கும்!!

Related posts:


தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை - டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
மன்னாருக்கு வேலைவாய்ப்புக்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது - காற்றாலை அங்குரார்...
தமிழ் மக்களின் வரலாறுகளை சரிவர விளங்கிக் கொள்ளாத சாணக்கியன் போன்ற சிலர் பிரச்சினைகளை தீர்க்கப் போகிற...