அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை மாவட்டத்திற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!

Friday, December 27th, 2019


முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் மற்றும் மக்களது தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக கடல்தொழில் மற்றும் நீதியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது மாவட்டத்தின் பல்வேறு பட்ட இடங்களுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவுள்ளதுடன், முல்லை மாவட்டத்தில் கடல் வள உயிரின வளர்ப்பு மற்றும் கடல் தொழில் துறைசார் அபிவிருத்திகளை முன்னெடுப்பது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மக்கள் சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: