அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது அபிவிருத்திக்கும் முழுமையான பங்களிப்பை வழங்குவோம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Friday, September 27th, 2019


செம்பியன் பற்று தெற்கு அண்ணமார் சிவகாமி அம்பாள் சமேத சுந்தரேஸ்வர் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதியில் வாழும் மக்களது  அபிவிருத்திக்கும் நாம் முழுமையான பங்களிப்பை வழங்க நாம் என்றும் தாயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார். இதன் ஒரு பகுதியாக செம்பியன் பற்று தெற்கு அண்ணமார் சிவகாமி அம்பாள் சமேத சுந்தரேஸ்வர் ஆலயத்திற்கு வியஜம் மேற்கொண்டு சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதன்பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யுத்தத்தில் பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட எமது மக்களை மன ரீதியாக சாந்தப்படுத்துவதில் ஆலய வழிபாடுகள் பங்களிப்பு செய்கின்றன. அந்தவகையில் இந்த ஆலயத்தை சூழவுள்ள மக்கள் தத்தமது வாழ்வாதார முறைகளிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான சுயதொழில் முயற்சிகளையும் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அந்தவகையில் வரவுள்ள சந்தர்ப்பங்களை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதோடு நாம் கூறும் வழிமுறைக்கு ஆதரவுப்பலத்தை தருவீர்களானால் நிச்சயம் இப்பிரதேசமல்லாது தமிழ் மக்கள் அனைவரும் சுபீட்சமான வாழ்வியலை வாழ வழிவகை செய்துதர நான் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.

Related posts:

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்த துக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் மக்...
நெடுந்தீவு இறங்குதுறை விரிவாக்கம் நெடுந்தாரகையின் இலவச போக்குவரத்து குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
இரணைதீவில் கடற்தொழில் மேற்கொள்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் ஆராய்வு...