அடைமழையால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசனை!

Sunday, December 8th, 2019


தற்போது நாட்டில் நிலவும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பிலும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்டதுரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அளைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சூழவுள்ள பகுதியில் வாழும் மக்கள் வெளியேறி தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர்.

குறித்த மக்களுக்கு உடனடி தேவைகள் மற்றும் சுகாதார முன்னெடுப்புகள் தொடர்பில்  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்ககைகள் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

Related posts:

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் - கிளிநொச்ச...
மீண்டும் மக்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முடியாது : மல்லாவி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை...