வேலணை பிரதேச செயலரின் இடமாற்றம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 27th, 2021

வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி பிரதேசத்தின் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கையளித்தள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திரந்த குறித்த பிரதேச மக்கள் தமது கொரிக்கை தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் அப்பிரதேசத்தின் நலன்கருதியும் குறித்த இடமாற்றம் தொடர்பில் தாம் உரிய கவனம் செலுத்தி அதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக மக்களிடம் உறுதிமொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலணை பிரதேசத்தின் செயலராக பதவிவகித்த சோதிநாதன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள் நிலையிலேயே குறித்த பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகள் தொடர்ச்சியாக  வேலணை பிரதேசத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றையதினம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


திருமலை மாவட்ட கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
அதிகாரத்தை யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் - பாதிக்கப்பட்டதொண்டர் ஆசிரியர்கள...
பேலியகொட மீன் சந்தையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்...