வேலணை நேதாஜி சனசமூக நிலைய பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

வேலணை நேதாஜி சனசமூக நிலைய பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று ஆராய்ந்து அறிந்து கொண்டார்.
எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதே எமது பணியாகும். அந்த செயற்பாட்டையே நாம் நீண்ட காலமாக மக்கள் மத்தியிலிருந்து செய்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வேலணைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் நேதாஜி பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து கொண்டார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வேலணைப் பிரதேசமானது எமது கட்சியின் ஆளுகைக்குள் இருப்பதால் இப் பகுதி மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பது இலகுவானதாக இருக்கும். அந்தவகையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் வெகு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்
இதனிடையே அப்பகுதி மக்கள் தமது அடிப்படைப் பிரச்சினைகளான வாழ்வாதாரம், வீட்டுத்திட்டம், கல்வி, சுகாதாரம், மின்விளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அபிவிருத்திகளில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் நாம் பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா காலக்கிரமத்தில் அவற்றிற்கான தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என்றார்.
Related posts:
|
|