வேலணை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறக்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!

Saturday, February 3rd, 2018
வேலணை, வங்களாவாடி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்படி பாடசாலையானது கடந்த 1991ஆம் ஆண்டு தொடக்கும் மூடப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அங்குள்ள மாணவர்களது கல்வித் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் இப்பாடசாலையின் தேவை தொடர்பில் அப்பகுதி மக்களாலும், புத்திஜீவிகளாலும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இப்பாடசாலையை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த காலங்களில் சமூக அக்கறையின்மை காரணமாக இப்பாடசாலை அமைந்துள்ள பகுதியை சந்தையாக மாற்றுவதற்கு ஒரு சிலர் எடுத்திருந்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேற்படி பாடசாலையை புனரமைப்புச் செய்து, மீண்டும் அதனை மாணவர்களது கல்வி நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: