வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு – டக்ளஸ் எம்.பி!

Sunday, October 20th, 2019

வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதை இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் நாம் கூறும் வேட்பாளரான கோட்டபய ராஜபக்‌ஷவை வெற்றிபெறச் செய்வீர்களானால் அந்த வெற்றியை உங்கள் வெற்றியாக நாம் உருவாக்கிக் காட்டுவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா காயாங்குளம் பகுதியி நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்கள் இன்று கூட்டமைப்பின் போலித்தனமான அரசியல் செயற்பாடுகளால் பலவகையான ஏமாற்றங்களை சந்திதுள்ளனர். அதனால் அவர்கள் யாரையும் நம்பும் வகையில் இல்லாதுள்ளனர். ஆனாலும் நாம் இதர தமிழ் கட்சிகளுடன் வேறுபட்ட நிலையிலேயே உங்கள் முன்வருபவர்கள். நாம் பொய்யான வாக்குறுதிகளை என்றும் மக்களுக்கு வழங்கியது கடையாது.
நாம் செய்வதையே சொல்பவர்கள். அதனால் தான் எம்மை நம்புங்கள் செய்வோம் செய்விப்போம் என நாம் கோரிவருகின்றோம்.
அத்துடன் இப்பகுதி மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து தேவைப்பாடுகளுக்கும் நாம் தீர்வுகண்டு தருவோம்.
அதற்காக நீங்கள் அனைவரும் நாம் கூறும் வழிமுறை நோக்கி அணிதிரண்டு ஆதவுப்பலத்தை தாருங்கள். அதனூடாக வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரவு கொடுக்கும் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ச வெற்றி பெறும் வாய்ப்பு உறுதிசெய்யப்படும்.
அவரது வெற்று உறுதி செய்யப்படபோது அவரூடாக எமது மக்களின் அபிலாசைகளை எம்மால் நிறைவுசெய்து கொடுக்க முடியும்.
அந்தவகையில் மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தொடர்பில் நீங்கள் சிந்திக்க தேவையில்லை. எம்மை நம்பி உங்கள் வாக்கை மொட்டு சின்னத்திற்கு வழங்குங்கள். அதற்கு நாமே பொறுப்புக் கூறுவோம் என்றார்.

Related posts:

தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்த...
வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆ...
தீர்க்கதரிசனம் இல்லாத தலைமைகளினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந...