வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைப்பு!

Tuesday, December 25th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஆறுதல் நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரதீபனிடம் கையளித்தார்.

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கும் பொருட்டு ஆறுதல் நிறுவனத்தினரால் உலர் உணவு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. அவ்வாறே சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களில் ஒரு தொகுதி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கென வழங்கும் பொருட்டு இன்றையதினம் கையளிக்கப்பட்டது.

இவ் உலர் உணவுப் பொருட்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் திரு.பிரதீபனிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக கையளித்திருந்தார்.

இதன் பிரகாரம் இவ் உதவிப் பொருட்கள் குறித்த பிரதேச செயலக பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிப்பொருட்களை சேகரித்து வழங்கியமைக்காக ஆறுதல் நிறுவனத்தினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

48415611_221401488779073_7283377052038725632_n

48417337_227833721443703_4688141530127400960_n

48413363_432268600642150_2252697427490373632_n

49121044_282509885783133_8297105933666877440_n

 

 

Related posts: