வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் – யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிப்பு!

Wednesday, September 27th, 2023

யாழ் மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு பொருத்தமான இடங்களில் வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த வேண்டிய அதேவேளை, மக்களுக்கு தேவையான மணலை நியாயமான விலையில் பெற்றுக் கொடுப்பதற்கான கடப்பாட்டினை கருத்தில் கொண்டு குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

முன்பதாக வடமராட்சி, மருதங்கேணியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் காவலரணொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்று வரை அதற்காக எந்தவித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்று  இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மருதங்கேணி பிரதேச செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள்  இடம்பெற்று வருவதாகவும்,  கூட்டங்களில் மாத்திரமே இந்த விடயம் குறித்து பேசப்படுவதாகவும், ஆனால் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை  எனவும் அவர்  விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
கிண்ணியா, ஈச்சந்தீவு பிரதேச வயல் காணிகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை !
கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேச மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவுசெய்தார் அமைச்சர் டக்ளஸ...