வென்னப்புவ வெள்ளமண்கரை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்றது நவீன மீன்பிடித் துறைமுகம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, May 17th, 2020

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்றையதினம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த துறைமுக பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

குறிப்பாக இலங்கையில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டமைப்பை கொண்டுள்ள டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமாண வடிவமைப்பு தெர்டர்பிலும்  பார்வையிட்டு ஆராய்ந்தறிந்துகொண்டார்.

முன்பதாக புத்தளம் மாவட்டம் வென்னப்புவ வெள்ளமண்கரை பிரதேச பலநாள் கலன்களை கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் கடற்றொழிலாளர்கள் தமது பகுதியில் நிர்ணயிக்கப்பட்டுவரும் மீன்பிடித்துறைமுகத்தை டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தை ஒத்ததான நவீன கட்டுமாணத்துடன் நிர்மாணித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த வென்னப்புவ வெள்ளமண்கரை கடற்றொழிலாளர்களது வேண்டுகோளை நிறைவேற்றி கொடுக்கும் முகமாக இன்றைய டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுக வடிவமைப்பு தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வென்னப்புவ மீன்பிடித்துறைமுகத்தை டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தின் வசதிகளை விட மேலும் பல நவீன வசதிகளுடன் நிர்மாணித்ததுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக  65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளல...
அனுபவங்களூடாக ஆற்றல்களை மேம்படுத்தி சமூக முன்னேற்ற த்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் -...
உள்ளூராட்சி தேர்தலை  வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்  -வேட்புமனு தாக்கல் செய்த...