வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து வளமான வாழ்வியலை உறுதிப்படுத்துங்கள் – சுதுமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 2nd, 2018

தேர்தல் காலங்களில் எம் கட்சி மீது சேறுபூசும் நடவடிக்கைகளை சக தமிழ்க் கட்சிகள் திட்டமிட்ட ரீதியில் தற்போதும் முன்னெடுத்துவரும் நிலையில் இவ்விடயத்தில் பொதுமக்கள் நன்கு தெளிவுபெற வேண்டியது அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுதுமலை வடக்கு பகுதி மக்களுடனான கலந்துரையாடலின்போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேர்தல் காலங்களில் எமக்கான வெற்றிவாய்ப்புக்களை தடுக்கும் நோக்குடன் சக தமிழ் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு அவதூறுகளை பரப்பிவருகின்றமையானது இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தொடர்கின்றது.

எம் கட்சி மீது விஷமப்பிரசாரங்களை முன்னெடுத்து எமது கட்சியின் வெற்றியை மழுங்கடிக்கும் நோக்கில் இவ்வாறான அவதூறுப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இது ஒருவகையில் அவர்களின் இயலாத்தன்மை மற்றும் காழ்ப்புணர்ச்சித் தன்மையாகவே கருத முடிகின்றது.

எனவே இது போன்ற அவதூறான எமது கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான விஷமப்பிரசாரங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் கட்சியின் தோழர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பங்களிப்பை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேபோன்று சுதுமலை தெற்கு பகுதி மக்களைச் சந்தித்த டக்ளஸ் தேவானந்தா மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அதேவேளை சமகால அரசியல் விடங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் மக்கள் வீணைச் சின்னத்துக்கு வாக்களித்து அதன் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இம்மக்கள் சந்திப்புகளின்போது கட்சியின் வலி.தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலார் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் மற்றும் கட்சியின் வேட்பாளர்களும் உடனிருந்தனனர்.

DSC_0081 DSC_0128 DSC_0137 DSC_0141

Related posts:

அடிப்படைவாத தமிழ்க் கட்சிகளே எமது மக்களின் பின்னடைவு களுக்கு காரணம் - மூத்த எழுத்தாளர் தெணியான் சுட்...
மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை - நாடாளுமன்றத்தில் டக...
உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்களையும் பெற்றுத்தருவேன் - திருமலையில் செயலாளர் நாயகம் உறுதிய...