வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – வேட்பாளர்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 3rd, 2018

வீணைச் சின்னத்திலான எமது கட்சியின் வெற்றியை உறுதிசெய்வது மட்டுமன்றி அந்த வெற்றியை வலுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றுள்ள சூழ்நிலை எமக்கு சாதகமாக உள்ள நிலையில் அதனை நாம் சரிவர பயன்படுத்திக் கொனள்ள வேண்டும் என தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் பெற்றுக்கொள்ளவுள்ள வெற்றியானது எமது மக்களின் வாழ்வியல் விடியலுக்கான ஆரம்பமாகப் புள்ளியாகவும் அமையும்.

கடந்தகாலங்களில் நாம் பல சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு மக்களின் நலன்சார்ந்த பல்வேறு செயற்றிட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்திக்காட்டியுள்ளோம்.

இந்த தேர்தலில் நாம் ஒன்றிணைந்து எமது அர்ப்பணிப்புடனான உழைப்பை பயன்படுத்தி வெற்றியையே எமது இலக்காகக் கொண்டு செயற்படுவோம். அந்தவகையில் வீணையின் வெற்றி மக்களின் வெற்றியாக அமையப்பெற  மக்களிடம் எமது கருத்துக்களை கொண்டுசெல்ல வேண’;டம்.

குறிப்பாக ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானவை என்பதுடன் வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டியதும் மக்களுக்கு வலியுறுத்தவேண்டும்.

அந்தவகையில் வீணைச் சின்னத்திலான எமது கட்சியின் வெற்றி உறுதிசெய்யப்படும் பட்சத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் தொடக்கம் அனைத்துவிதமான தேவைப்பாடுகளையும் துரிதகதியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும் எனவும்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts: