வீட்டுத்த திட்டத்தால் கடனாளிகளானவர்களுக்கு நிவாரணம் வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, August 8th, 2018

கடந்த காலங்களில் வீடமைப்புக் கடன்களைப் பெற்றவர்களது நிலுவையில் இருக்கின்ற கடன் தொகைகள் மற்றும் தண்டப் பணங்கள் அறவிடுகின்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. இது தொடர்பில் நான் ஒரு கேள்வியும் கௌரவ அமைச்சர் அவர்களிடம் முன்வைத்திருக்கின்றேன்.

அதாவது, வீட்டுக் கடன் பெற்றவர்களில் சிலர் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தங்களது பொருளாதார நிலைமை காரணமாக அந்தக் கடனை – தண்டப் பணத்தினை மீளச் செலுத்த இயலாத நிலையில் இருக்கின்றனர். எமது பகுதிகளைப் பொறுத்த வரையில் வறுமை நிலையானது மிகவும் தாராளமாகவே நிலை கொண்டுள்ள காரணத்தினாலும், குடும்ப பொருளாதாரத்தினை ஈட்டிக் கொள்வதற்கு போதியளவு தொழில்வாய்ப்புகள் இன்மையினாலும் இத்தகைய நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, எமது மக்களின் வாழ்க்கை நிலைமைகளை அவதானத்தில் கொண்டு, இந்த தொகைளை இரத்துச் செய்வதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் ஒரு விஷேட ஏற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இணை மனை சொத்தாண்மை விசேட ஏற்பாடு  சட்டமூலம்  நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

நிலையான ஆட்சிக்கு வாய்ப்பில்லையேல் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுங்கள் - சபையில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை...
கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
இந்திய வெளிவிவகார அமைச்சர் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு – வடக்கின் பல்வேறு...