வீட்டுத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட எமக்கு வீடுகளை பெற்றுத்தாருங்கள் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா (பா.உ)விடம் கோரிக்கை!

1 Friday, April 21st, 2017

வவுனியா குருமன்காடு பகுதியில் வீட்டுத்திட்ட தேவைப்பாடுகளுடன் வாழும் மக்களையும் வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இன்றையதினம்(21) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் அப்பகுதியில் வாழும் நிரந்தர வாழ்விடங்கள் இல்லாத மக்கள் மற்றும் வீட்டு திட்ட வழங்கலில் அங்குள்ள அரசியல் தரப்பினரால் புறக்கணிக்கப்பட்ட ஒருதொகுதி மக்களை  சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது தாம் நீண்டகாலமாக நிரந்தர வீடுகள் இன்மையால் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகதெரிவித்த மக்கள் இது தொடர்பாக தாம் பல்வேறு அரசியல் தரப்பினரிடம் தமக்கான வீட்டு திட்டங்களை பெற்றுத்தருமாறு கோரியிருந்தும் அவர்கள் இதுவரை தமக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்று தராமையால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் தமது பகுதியில் வழங்கப்படுகின்ற பல்வேறுபட்ட உதவிகளில் கூட இங்குள்ள அரசியல் தரப்பினர் பாகுபாடுகளைகாட்டி தங்களை புறக்கணித்துள்ளதாகவும் அவற்றில் கூட முறைகேடுகள் காணப்படுவதாகவும் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிட்டிருந்தனர்.

மேலும் தற்போது மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்படும் இலகு வீட்டுத்திட்டத்தையாவது தமக்குபெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மக்களது பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் ஆராய்ந்தறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்ததுடன் இப்பகுதியில் வீட்டுத்திட்டங்கள் மட்டுமல்லாது பொருளாதார மத்திய நிலையமும் இங்குள்ள அரசியல் பிரதிநிதிகளின் முரண்பாடுகள் காரணமாக அமைத்துக்கொள்ள முடியாது இழுபறி நிலையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்ததுடன் இது அமைக்கப்பட்டிருந்தால் இங்குள்ள மக்கள் பல்வேறு அனுகூலங்களை பெற்றிருக்கமுடியும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.


தனியார்துறை ஊதிய உயர்வு வெறும் எழுத்து மூல ஆவணம்தானா? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
அரசு வெற்றி மனோநிலையோடு இருந்தபோதும் நான் தமிழ் மக்களின் குரலாக அரசின் கோட்டைக்குள் ஒலித்திருக்கின்ற...
கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் யாழில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக...
முல்லைத்தீவுமாவட்ட உதைபந்தாட்ட லீக் இறுதிப்போட்டியில் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்று ...
தமிழ் மொழி கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!