விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே மக்கள் அனுபவிக்கின்றனர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Saturday, July 18th, 2020

விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே எமது மக்கள் அவலங்களாக அனுபவிக்கின்றார்கள் என்று தெரிவித்த ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்

தேவானந்தா, குறித்த அவலங்களில் இருந்து மக்களை மீட்பதற்காகவே தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதாவும் தெரிவித்தார்.

அராலியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஆயுதப் போராட்டம் விவேகமற்ற தலைமைகளினால் தவறான வழியில் திசை திருப்பப்பட்டமையினால் மோசமான அழிவுகளையும் மக்களுக்கு அவலங்களையும் ஏற்படுத்தி விட்டதாக தன்னுடைய ஆதங்கத்தினை வெளியிட்டார்.

எனினும், குறித்த ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளிகளில் ஒருவன் என்ற வகையில் மக்கள் எதிர்கொண்ட அழிவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று  மக்களுக்கான சிறந்த வாழ்வை ஏற்படுத்துவதற்காக உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெருமுன அணியினரே வெற்றி பெறவுள்ளமையினால் வடக்கு கிழக்கில் தனக்கு கணிசமான ஆசனங்கள் கிடைக்குமாயின் இலகுவாக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்

Related posts:

குடும்பங்களை  தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் - ...
எம் வசம் கிடைக்கும் உள்ளூராட்சி சபைகள் ஊர் பிரமுகர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையின் ஆலோசனைகள் பெற்றே நிர...
மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்...