விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நலன்கருதி – இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய் கொண்டுவரும் நடவடிக்கை தீவிரம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 24th, 2022

இந்தியாவிலிருந்து மண்ணெண்ணெயை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு  வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காமை  பாதகமான விடயமாக காணப்படுகிறது.

அதனை தீர்ப்பதற்கு இந்தியாவில் இருந்து   210 லீட்டர் கொள்ளக்கூடிய சுமார் 1500  கொள்கலன்களை ஒரே தடவையில் இறக்குமதி செய்வதற்கு சாதகமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கப்பலில் எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதற்காக பாதுகாப்புச் செயலாளரிடமும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளேன். அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.

எனவே, விரைவில் குறித்த நடவடிக்கை வெற்றியளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு என்பது கூட்டமைப்புக்காக அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே – டக்ளஸ் ...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் விபரம்!
மயிலிட்டி குளத்தடி தேவியார்கொல்லை கண்ணகை அம்மன் ஆலய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ...