விழித்துக் கொண்டதால் நான் பிழைத்துக் கொண்டேன்: கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, July 11th, 2020என்னுடன் பயணித்தவர்கள் இன்றும் பயணிப்பவர்கள் போன்றோரை சந்திப்பதும் அளவலாவுவதும் மனதுக்கு நிறைவாக இருக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

திருமலையில் ஈ.பி.டி.பி. கட்சியுடன் இணைந்து செயற்பட்ட மற்றும் செயற்படுகின்ற கட்சித் தோழர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்தார்.

“உங்களை காணும்போது கடந்த கால நினைவுகள் மீண்டு வருகின்றன. ஆயுதப் போராட்ட காலத்திலும், பின்னர் ஜனநாயக அரசியல் பயணத்திலும் என்னோடு இணைந்திருந்த பலர் இங்கே இருக்கின்றீர்கள். எதிர்காலத்திலும் உங்கள் எல்லோருடனும் இணைந்து பயணிக்க வேண்டும். எல்லோருக்கும் வளமான வாழ்வை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய விருப்பத்தினை வெளிப்படுத்தியிரு
ந்தார்.

இதன்போது, கடந்த கால சம்பவங்கள் சிலவற்றை மீட்டிருந்த செயலாளர் நாயகம் அவர்கள், தன்னை கொலை செய்வதற்கு பலர் முயற்சித்த போதிலும் தான் விழித்துக் கொண்டதால் இப்போதும் உங்களுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
நந்திக்கடல் ஆளமாக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் – ...
கடற்றொழில்சார் மக்களின் வாழ்வியலை பாதுகாத்து வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - பிரச்சினை...