விரைவில் கிளிநொச்சி – வலப்பாடு பிரதான வீதி புதுப்பொலிவு பெறும் – டக்ளஸ் எம்.பி நம்பிக்கை தெரிவிப்பு!

Wednesday, October 23rd, 2019

ஆட்சி மாற்றத்துடன் கிளிநொச்சி வலப்பாடு பிரதான வீதி புதுப்பொலிவு பெறும். அதற்கான செயற்பாடுகளை  நான் நிச்சயம் முன்னெடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வலப்பாடு தெற்கு கிராம மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிவதற்காக அப்பகுதி மக்களின் அழைப்பின் பெயரில் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்

இதன்போது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தபின் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் அதன் வளர்ச்சியிலும் அப்பிரதேசங்களின் வீதிகளின் அபிவிருத்திகளும் போக்குவரத்தும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.  ஆனால் இப்பிரதேசத்தின் முக்கிய வீதிகள் எவையும் செப்பனிடப்படாது காணப்படுகின்றது. ஆனால் தற்போது ஆட்சியில் அதிகாரத்துடன் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த மக்களின் அவலங்கள் தொடர்பில் தமது சுயனலன்களுக்காக  அக்கறையற்றவர்களாக இருந்துவருகின்றனர். ஆனால் மக்களின் இந்த அவல நிலை.  இந்நிலை மாற்றப்பட்டு இப்பிரதேச மக்களும் தத்தமது வாழ்வாதாரத்தில் வளம்பெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

அந்தவகையில் இப்பகுதி மக்களின் தீரா பிரச்சினையாக உள்ள வீதி புனரமைப்பு நிகளவுள்ள ஆட்சி மாற்றத்துடன் புதுப்பொலிவு பெறும் என உறுது கூறுகின்றேன். அதுமட்டுமலாது இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் நான் பெற்றுத்தர நான் தயாராகவே இருக்கின்றேன்.

ஆனாலும் இவற்றை நாம் விரைவாக செய்வதற்கு அதிகளவு அரசியல் அதிகாரம் எமக்கு வேண்டும்.  அந்தவகையில் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரிக்கும் கோட்டபய ராஜபக்‌ஷவின் வெற்றியில் நாம் பங்காளர்களக இருப்பது அவசியம். அதனூடாக எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை மட்டுமல்லாது எமது மக்களின் அபிலாசைகளையும் எம்மால் வெற்றிகண்டுதர முடியும் என்றம் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே கிராஞ்சி பகுதி மக்களையும் சந்தித்த செயலாளரல் நாயகம் சமகால அரசியல் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வீதி திருத்த அறிவிப்புகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
எவ்வாறானதொரு சூழ்நிலையாயினும், அதனை மக்களின் நலன்களிலிருந்து எதிர்கொள்வோம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
எல்லை நிர்ணயத்தை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா?...

நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ள வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் - செயலணியிடம் டக்ளஸ் தேவானந்...
ஊழல் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு,  வட மாகாண முதலமைச்சருக்கு கீழான அமைச்சுக்களையும் விசாரிக்...
ஒருவிநாடி கிடைத்தாலும் அந்த ஒரு நொடிப்பொழுதையும் மக்களுக்காகவே பயன்படுத்துவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவ...