விரைவில் ஈ.பி.டி.பியின் தேசிய மாநாடு – முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Friday, May 31st, 2024யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாகவும் ஆரோக்கியாகவும் முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் தேசிய மாநாட்டை விரைவில் நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் முன்னேற்பாடாக மாவட்ட ரீதியில் கட்சியின் மாநாட்டை நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் (31.05.2024) இடம்பெற்ற மாவட்ட மற்றும் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய கலந்துரையாடலின்போது, கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெளிவுபடுத்தப்பட்டது.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படிடையிலும், கொள்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கிலும் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு இம்மாநாட்டை நடத்துவதென ஏற்கனவே திட்டமிட்டதற்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் மாபெரும் எழுச்சியுடன் கட்சி மாநாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான பூர்வாங்க வேலைகள் தற்போது மாவட்டங்கள் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|