விடுதலை வித்துக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அஞ்சலி மரியாதை!

Tuesday, June 5th, 2018

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்தாக தன்னை விதைத்த பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவுகள் என்றும் நினைவு கூரப்பட வேண்டும். அந்தவகையில் பொன் சிவகுமாரன் அவர்களுக்கு எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

விடுதலை வித்துக்கள் நினைவுதினத்தை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

பல நெருக்கடிகளுக்கும்; தடைகளுக்குமிடையே கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் பொன் சிவகுமாரன் அவர்களுக்கு வெண்கலச் சிலை அமைத்து அவர் பிறந்த உரும்பிராய் மண்ணில் நிலை நிறுத்தியதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செய்து முடித்த வரலாற்றுக் கடமையாகவே கருதுகின்றோம்.

அதேவேளை ஒரு பக்கம் சிங்கம் மறு பக்கம் புலியினதும் துப்பாக்கி முனையின் நடுவே அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்படும் பொல்லாத பொழுதிலும் மக்கள் சேவைக்காக தம்மை அர்ப்பணித்திருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் பலர் தமது உயிர்களை தியாகம் செய்திருக்கின்றார்கள்.

ஈழ மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் வழிமுறைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு உயிர்த்தியாகம் செய்த உன்னதமான தோழர்களுக்கு இன்றைய தினத்தில் நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்.

ஈழப் போராட்டத்தில் முதல் போராட்ட வித்தான பொன் சிவகுமாரனின் நினைவு நாளான இன்றைய தினத்திலேயே எமது தோழர்களுக்கும் சக இயக்க விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி மரியாதை செலுத்துவதை விடுதலை வித்துக்கள் தினமாக நாம் அனுஷ்;டித்து வருகின்றோம்.

விடுதலை வித்துக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு இறந்த தோழர்களை நினைவு கூருவதும் தமிழ் மக்களின் விமோசனத்திற்காக அவர்கள் சுமந்து போராடிய இலட்சியத்தை வென்றெடுப்பதும் நமது ஒவ்வொருவரினதும் கடமையாகும். அந்தக் கடமைப் பொறுப்பை உணர்ந்து தொடர்ந்தும் உழைப்போம்.

எத்தனை அவப்பெயரை எவர் சுமத்தியிருந்தாலும் நாம் காட்டிய திசையே சரியானது என்பதையும் நாம் முன்னெடுத்த அரசியல் அனுகுமுறைகளே நிதர்சனமானது என்பதையும் இன்று வரலாறு நிரூபித்திருக்கின்றது.

நீண்ட ஏமாற்றங்களைச் சந்தித்த தமிழ் மக்களிடையே ஒரு கோட்பாட்டு மாற்றம் ஏற்பட்டு வருவதை உணர்கின்றோம். இந்த மாற்றம் நாம் வகுத்துப் போராடிவரும் இலக்கினை வென்றெடுக்க உந்துசக்தியாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இறுதியாக,

இறந்த தோழர்களையும் சக இயக்க விடுதலைப் போராளிகளையும் நினைவு கூறும் இன்றைய விடுதலை வித்துக்கள் தினத்தில் எமது அஞ்சலியையும் சமர்ப்பணம் செய்கின்றோம்.

1 11 12 IMG_20180605_170624 10 9 7 6 2 3 IMG_20180605_162453

3 2

Related posts:

அரச நிறுவனங்களின் வெற்றி அதன் பிரதானிகளின் நியமனங்களிலேயே தங்கியுள்ளது - நாடாளுமன்றில் செயலாளர் நாயக...
வரலாற்று பாட நூல்கள் தமிழர்களை அந்நியர்களாகவே தொடர்ந்தும் அடையாளம் காட்டுகின்றன – டக்ளஸ் எம்.பி. சுட...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் கிளிநொச்சி மாவட்ட விசேட மாநாடு ஆரம்பம்!