விக்கியின் பேச்சுக்கள் மக்களுக்கு எதனை பெற்றுத் தரப்போகின்றன? – யதார்தத்தினை தெளிவுபடுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, August 22nd, 2020

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனி்ன்  நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மக்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்புக்களும்  நிச்சயம் நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தில் இன்று(22.08.2020) ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த தேர்தலில் மக்கள் வீணைக்கு வாக்களி்த்த மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கும் அதேபோன்று இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றவர்கள் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்புக்களும் வீண் போகாத வகையில் தன்னுடைய வேலைத் திட்டங்கள் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தன்னுடைய நாடாளுமன்ற கன்னி உரையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அவ்வாறான கருத்துக்கள் சில தமிழ் ஊடகங்களாலும் சமூக ஊடகங்களினாலும் பெரிதாக சிலாகிக்கப்பட்டாலும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கோ அலலது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ எந்தவிதமான தீர்வினை பெற்றுத் தராது எனவும் பாதகங்களையே அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பலமான மத்திய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், குறித்த அரசாங்கத்துடன் தனக்கு இருக்கும் தேசிய நல்லிணக்கத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, தனியார் போக்குவரத்து சங்கங்களின் உரிமையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அமைச்சரினதும் ஜனாதிபதி அவர்களினதும் கவனததிற்கு கொண்டு செல்வதன் ஊடாகவும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் அடங்கிய கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே நாம் ஒற்றுமையை வெளிப்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழியினை பின்பற்றி அவரோடு சேர்ந்து பயணித்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு தனியார் போக்குவரத்து சபை சார்பான ஒருவரையும் மாகாண சபைக்கான பிரதிநிதியாக தெரிவு செய்வோம். அதன் ஊடாக எமது சங்கங்கள் எதிர் கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளையும் துணிவோடு நின்று தீர்வை காணலாம் என்று வவுனியா தனியார் பஸ் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன்
ரஞ்சன் சுட்டிக்காட்டினார்

Related posts:

உழைப்பவர் தினத்தில் உரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்!.... மேதின செய்தியில் டக்ளஸ் தேவானந்தா
நன்றிக்கு தலை வணங்கும் நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் தி...