வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் சூரியகுமாரன்

Wednesday, August 2nd, 2017

கடற்றொழில் மக்களுக்கு டக்ளஸ் தேவானந்தா என்ற மனிதர் கிடைக்கப்பெற்றமையானது ஒரு வரப்பிரசாதம்  என பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை வியாபாரி மூலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் மக்களின் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது கடற்றொழிலாளர்கள் அவ்வப்போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இன்னல்களையும் இக்கட்டுக்களையும் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் அந்த மக்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களது உரிமைகளுக்காக குரல்கொடுப்பது மட்டுமன்றி அதற்கான செயற்பாடுகளிலும் துணிந்து நின்று செயற்படுபவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே.

தேர்தல் காலங்களில் எம்மிடம் வரும் எனைய தமிழ் அரசியல் வாதிகள் தமது சுயநலத்தை முன்னிறுத்தியதாக வாக்குறுதிகளை வழங்கி தேர்தல்களில் வெற்றியை தமதாக்கி கொள்வார்கள்; நாமும் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தபோதிலும் இதுவரையில் எமது பகுதிகளுக்கு அவர்கள் நேரில் வருகைதந்து எமது பிரச்சினைகளை தொடர்பில் கேட்கவில்லை.

ஆனால் டக்ளஸ் தேவானந்தா  நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக எத்தனையோ சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் எமது உரிமைகளுக்காக துணிந்து நின்று குரல்கொடுத்து வருகின்றார். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் போராட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்திய தலைவர்களில் வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா என்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உரியமுறையில் தீர்த்துவைக்கக்கூடிய ஆழுமையும் ஆற்றலும் அவரிடமே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் நாம் ஒன்றிணைந்து எமது வாக்குப் பலத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு வழங்குவோமாக இருந்தால் எமது கிராமம் பாரிய மாற்றங்களுடன் எழுச்சிபெறும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது, அப்பகுதி மக்களால் மழைகாலங்களில் தமது கிராமத்தில் மழைநீர் தேங்கி நிற்பதனால் தாம் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் சூழலில் அங்கு வடிகாலமைப்பின் அவசியம் குறித்து டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டிய மக்கள் மலசலகூட வசதி வீடமைப்பு வசதி உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பிலும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார். இதன்போது கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் இரட்ணகுமார் உடனிருந்தார்.

Related posts: