வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் – உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, November 2nd, 2019

எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பல வழிகளில் முயற்சித்தும் அவை பயனற்றுப் போனாலும் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் உங்களது வாக்குப்பலத்தை சரியான வழியில் நாம் கூறும் வழிமுறை நோக்கி வழங்குவீர்களானால் உங்களது வாழ்வை வளமானதாக உருவாக்கித்தர என்னால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு வடக்கு பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பாளர்கள். நாம் கொடுக்கின்ற வாக்குறுதிகளை எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக மக்களுக்கு செய்து கொடுக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் நாம் செய்து கொடுத்துள்ளோம். அதுவே எமது நோக்கமாகவும் உள்ளது.

நாம் 1987 இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் நாம் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்தோம்.

எமது மக்களின் உரிமைக்காக பல வழிகளில் நாம் போராட்டங்களை முன்னெடுத்தும் அவை தவறான வழிநடத்தல்களால் இலக்கை எட்ட முடியாது பயனற்றுப் போனது.

இதனால் எமது மக்கள் பல துயரங்களை எதுர்கொள்ள நேர்ந்தது.

இவ்வாறான துயர துன்பங்களுக்கு வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பொரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருக்க வேண்டும்.

அதனூடாகவே எமது மக்களின் எதிர்காலத்தை வென்றெடுக்க முடியும் .

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போல நாம் அடுத்தவர் மீது பழிகளை போட்டு தப்பித்துக்கொள்ள ஒருபோதும் முயற்சிக்கப்போவது கிடையாது. அத்துடன் இவர்களது போலித்தனங்களை தமிழ் மக்கள் இனி நம்பவும் போவதில்லை.

அந்த வகையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் மூலம் சிறந்த ஒரு சந்தர்ப்பம் வந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்துவார்களானால் எமது மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு நாம் அடுத்த ஆட்சியில் முடியுமானவரை தீர்வு கண்டு கொடுப்போம். இதற்கு நானே பொறுப்பு.
எம்மை நம்புங்கள்.நாம் செய்வோம் செய்விப்போம் என்றார்.

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ACC  2014 ஆண்டு அணி மாணவர்கள் பாராட்டு...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவுப்பு...
அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்ச...

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
இயலுமானவரை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உழைக்கவேண்டும் – கட்சியின் நல்லூர் பிரதேச...
ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் – அமை...