வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

வவுனியா மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழு இணைத்தலைவரின் அலுவலகம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள குறித்த அலுவலகத் திறப்பு விழா வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்ற நிகழ்வில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வன்னிக்கான இணைப்பாளர் பாலித, முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால, மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர்களான இ.பிரதாபன், க.சிவகரன், ந.கமலதாசன், ஜானக்க, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த சில்வா, வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, அரச அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|