வவுனியா மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, October 12th, 2019


வவுனியா மாவட்டத்திற்கு இன்றையதினம் சிறப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்தின் கட்சி நிர்வாக செயலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

வவுனியாவாடி வீட்டில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்களுடனும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து மன்னார், முல்லைத்தீவு மாவட்ட கட்சி நிர்வாகக்குழு உறுப்பினர்களுடனும், பொது அமைப்புக்களுடனும் கலந்துரையாடவுள்ளார்.
மதியம் 01.00 மணியளவில் கள்ளிக்குளம் முருகன் ஆலயத்திற்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செல்லவுள்ளளதுடன் மாலை 03.00 மணிக்கு கிளிநொச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடனும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...
முற்போக்கு சிந்தனையோடு அனைவரையும் அரவணைத்து செயற்பட்டவர் அமரர் ரேணுகா ஹேரத் - டக்ளஸ எம்.பி. தெரிவிப்...
நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் ...