வவுனியா தினச் சந்தை செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க உதவுங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் வியாபாரிகள் கோரிக்கை!

Sunday, January 31st, 2021


……………….
வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, வவுனியா நகரத்தில் அமைந்துள்ள தினச் சந்தை வியாபாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
கொறோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சந்தை செயற்பாடுகள் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளமையினால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த சந்தை வியாபாரிகள், வடக்கு மாகாணத்தில் ஏனைய பெரும்பாலான சந்தைகள் மீண்டும் செயற்பட அனுமதிக்கப்பட்ட நிலையிலும் தமக்கு அனுமதி வழங்கப்படாமை ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், தேவையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சந்தை செயற்பாடுகளை முடியுமான விரைவில மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை ஆரம்பித்து வைப்பது தொடர்பாகவும் இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பூநகரி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
அரச நியமனங்களில் இன விகிகதாசாரம் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும...
அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்...

கல்வித் துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
எண்ணை ஆய்வுகளாலும் இராணுவ ஒத்திகைகளாலும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - டக்ளஸ் எம்....
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க கூட்டு ஒப்பந்தம் தடையா? -  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...