வவுனியா கருப்பனிச்சம் குளம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

வவுனியா கருப்பனிச்சம் குளம் பகுதி மக்களின் வாவாதாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதி மக்களை சந்தித்தி ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இதன்போது குறித்தபகுதி மக்கள் நிண்டகாலமாக அனைனத்துது தரப்பினராலும் தாம் புறக்கணிக்கப்பட்டு எதுவிர அரச சலுகைகளையோ அன்றி திட்டங்களையோ பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தமக்கு தாங்களாவது இப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலையை கருத்திற்கொண்டு உதவிகளை பெற்று தமது வறுமை நிலைக்கு தீர்வு கண்டுதருமாறும் கொரிக்கை விடுத்தனர்.
மக்களின் தேவைப்பாடுகள் பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட அமைச்சர் காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்ததுடன் இவற்றை தான் முன்னெடுத்துச் செல்வதற்கு வரவுள்ள தேர்தலை சரியாக பயன்படுத்தி தனக்கு அதற்கான அரசியல் பலத்தை வழங்குகுமாறும் தெரிவித்தார்.
Related posts:
|
|