வவுனியாவில் ஈ.பி.டி.பி. செயற்பாடுகளை செழுமைப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Thursday, August 12th, 2021

வவுனியா மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஐவரைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனுக்கு பக்கபலமாகா செயற்படும் வகையில் உருவாக்கப்பட்ட குறித்த குழு,  கட்சியின் எதிர்காலத் திட்டங்களையும் கட்சியின் மாவட்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகளையும் ஒழுங்கமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான திலீபனுக்கும் பொது மக்களுக்குமான ஒருங்கிணைப்பினை மேலும் செழுமைப்படுத்தும் வகையில் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட கட்சி உறுப்பினர்களுக்கான விசேட சந்திப்பிலேயே மேற்குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மாவட்ட நிர்வாக அமைப்பாளருமான திலீபன் மற்றும் கட்சியின் நிர்வாக அமைப்பாளர்கள், கட்சிச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் ...
பக்கபலமாக நான் இருக்கின்றேன் - இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந்து பணியாற்றி உங்களது எதிர்கா...
பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் - கௌதாரிமுனையில் அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் ...