வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பொது அமைப்புக்கள், பொதுமக்கள் சந்தித்து தமது தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Saturday, November 24th, 2018

வவுனியா மாவட்டத்தில் வாழும் மக்கள் பலரதப்பட்ட துன்ப துயரங்களுடன் பல்வேறு தேவைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். அத்தகைய எமது பகுதி மக்களின் எதிர்பார்ப்புக்களை பெற்றுத்தந்து அல்லலுறும் மக்களது வாழ்வியலில் ஒரு நம்பிக்கை ஒளியை காட்டுமாறு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

வவுனியா மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கட்டிடத்தில் பல்வேறு கோரிக்கை களுடன் வந்திருந்த பொது அமைப்புக்களையும் பொதுமக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே இவ்வாறு பொது அமைப்புகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து உரிய தீர்வுகளை பெற்றத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

viber image

viber image3

viber image5

Related posts: