வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகத்தான வரவேற்பு!

Thursday, November 8th, 2018

புதிய அரசில் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

வவுனியா வரவேற்பு வளைவு மண்டபம் முன்றலில் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து வவுனியா மக்களால் மிக மகிழ்ச்சிகரமாக வரவேற்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மோட்டார் சைக்கிள் பவனி ஊர்வலமாக பிரதான வீதி வழியாக வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதிவிநாயகர் கோவிலடிவரை அழைத்துவரப்பட்டு அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

அதன் பின்னர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வவுனியா பிரதான பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகை நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன்  மௌலவி அமீர் கபீஷ் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

45650842_583549645428552_8453373693052059648_n

45671241_674210969625098_4641221413305319424_n

45745610_1916810205083855_7694520153727303680_n

45809602_2221140678174947_7441660504000430080_n

45628918_174597466826199_6475794149508382720_n

45614098_2592367060788475_7129906235486240768_n

Related posts: