வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

அனுபவங்களைப் பாடமாகக்கொண்டு கிடைக்கும் வழிமுறைகள் எதுவானாலும் அதனை தமிழ் மக்களுக்கான நிரந்தர விடியலைத்தேடி தரும் களமாக அமைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அந்தவகையில் அதற்கான சரியான வழிமுறைகளை இலக்காகக்கொண்டே எமது அரசியல் நகர்வுகள் முன்னெடுத்துவருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற யாழ்ப்பாணம் பிரதேச வட்டாரச் செயலாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழ் மக்களுக்கான அரசியல்த் தீர்வு விடயத்திலும் ஒரு வழமான ஒளிமயமான வாழ்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.
அத்துடன் எமது மக்கள் நிலையான சமூக பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதனூடாகவே தனிநபர் மட்டுமன்றி தான் சார்ந்தவாழும் சமூகத்தை பொருளாதார வழர்ச்சியில் முன்னேற்றம் காணச்செய்யமுடியும். அதற்கு மக்களுடன் நின்று மக்கள் சேவைகளை அர்ப்பணிப்படுனும் சமூக அக்கறையுடனும் உழைப்பதற்கு எமது கட்சியால் தற்போது உருவாக்கப்பட்டள்ள இந்த வட்டார முறையிலான கட்டமைப்பு உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|