வழித்தட அனுமதிக்கான அறவீட்டை மேலும் இரண்டு மாதங்களுக்கு சலுகையாக பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ் மாவட்ட மினிபஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

Thursday, July 2nd, 2020

நாட்டிலேற்பட்ட கொரோனா தொற்றை அடுத்து தனியார் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதால் பொருளாதார ரீதியில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மினிபஸ் உரிமையாளர்கள் தமது சேவைகளை மேற்கொள்வதில் சலுகைகளை பெற்றுத்தருமாறு யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க நிர்வாகத்தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த மார்ச்ச மாதம் 20 ஆம் திகதி முடக்கப்பட்ட சேவைகள் இன்னமும் இயல்பு நிலைக்ககு திரும்பாத நிலையே காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது வடக்கு மாகாணத்தில் 1011 தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது 200 இக்கம் சற்று அதிகமான பேருந்துகளே சேவையை முன்னெடுக்கக்கூடியதாக உள்ளது.

இதனால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் மக்களும் தற்போது அதிகளவில் பேருந்துகளை நாடுவது குறைந்துள்ளது. இந்நிலையில் நாளாந்தம் வழித்தட அனுமதிக்காக 750 ரூபா கட்டவேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த வழித்தட அனுமதிக்கான நிதியை அறவிடாது மேலும் இரண்டு மாதங்களுக்க சலுகை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். மினிபஸ் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதுதொடர்பில் ஆராய்ந்’து துறைசார் அதிகாதரிகளுடன் பேசி தீர்வுகளை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்’தமை குறிப்பிடத்தக்கது

Related posts: