வல்வெட்டித்துறையில் மீண்டும் நோயாளர் விடுதி – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

வல்வெட்டித்துறை, ஊறணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
தாதியர் பற்றாக்குறை காரணமாக குறித்த வைத்தியசாலையினன் நோயாளர் விடுதி(ward service) சேவை நிறுத்தப்பட்டிருந்ததுது.
இதனால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கு.கமலதாஸினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், குறித்த வைத்தியசாலையின் விடுதி சேவையை இயங்க வைப்பதற்கு தேவையான தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு ஏற்பாடு செய்தமையினால் குறித்த வைத்தியசாலையில் நோயாளர் விடுதியின் செயற்பாடுகள் சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|