வலி வடக்கு மீள்குடியேற்றப்பட்ட பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா களஆய்வு!

Friday, February 17th, 2017

மூன்று தசாப்தங்களின் பின்னர் தாம் தமது பூர்வீக நிலங்களுக்கு மீளத்திரும்பியுள்ள நிலையில் தமக்கு குடிநீர், மலசலகூட வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்திசெய்து தரப்படவில்லை என ஈழமக்கள் ஜனநாயனக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் வலிகாமம் வடக்கு பகுதியில் அண்மையில் மீளக்குடியேறியுள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வலிகாமம் வடக்கில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வறுத்தலவிளான, தையிட்டி, ஊறணி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்றையதினம்; விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியில் உள்ள மக்களது பிரச்சினைகள் தொடரபாக கேட்டறிந்துகொண்டார்.

இந்த  சந்திபபுகளின்போதே மக்கள்; மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்படடுள்ளது.

குறித்த பகுதியில் வாழும் மக்கள் மேலும் தெரிவிக்கையில் –

மீளக்குடியேறியுள்ள தமது பகுதிகளுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாமையால் வீடுகளை பூரணமாக முடியாதுள்ளதாகவும் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டினர்

அத்துடன், தமது பகுதிகளுக்கான வீதிகள் புனரமைப்பின்றி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் இவற்றை புனரமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திய மக்கள் குடிநீர், மின்சாரம் மலசலகூடம் உள்ளிட்ட சுகாதார வசதிகள் இன்மையால் தாம் நாளாந்தம் பல்வேறுப்பட்ட நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக மீள்குடியேறிய தமக்கு வாழ்வாதார உதவித்திட்டங்களோ மேலதிக உதவித்திட்டங்களோ வழங்கப்படாத நிலையிலம் போதுமானளவிற்கு வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும் தமது அன்றாட உணவுக்குக் கூட தாம் மிகுந்த சிரமங்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே மீளக்குடியேறி ஒன்றரை இரண்டு வருடங்கள் முடிந்துள்ள போதிலும் தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உருப்பினர்களோ வடக்கு மாகாண சபை முதலமைச்சரோ அமைச்சர்களோ உறுப்பினர்களோ தமது நிலவரங்கள் தொடர்பில் அக்கறையற்று இருக்கின்றார்கள் என்று விசனம் தெரிவித்த மக்கள,; தமது பகுதிக்கு நேரில் வருகை தந்து தமத பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி கேட்டந்துகொண்ட டக்ளஸ் தெவானந்தாவிற்க  தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மக்களது தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா உரிய தரப்பினருடன் கலந்துரையாடி மக்களின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும்  தெரிவித்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச்  செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் அன்பு, கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாக செயலாளர் வலண்டன் ஆகியோர் உடனிருந்தனர்

15

16

3
13

12

7

6

5

4

10

9

2

1

8

11

 

 

 

 

Related posts:


மக்கள் திருப்தியடையும் வகையிலேயே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
வடக்கின் கடல் வளங்களின் சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் -சபையில் டக்ளஸ் தேவானந்தா ...
காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து...