வலி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Monday, May 25th, 2020

அண்மையில் வீசிய கடுங்காற்று காரணமாக கோப்பாய், நீர்வேலி, அச்செழு போன்ற பிரதேசங்களில் சுமார் ஐநூறு ஏக்கர் பிரதேசத்தி்ல் பயிரிடப்பட்டிருந்த
வாழை மரங்கள் முறிந்து அழிவடைந்துள்ளன.

இந்நிலையில் குறித்தபிரதேசத்திற்கான இன்று நேரடியாக சென்ற கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அழிவுகளை நேரடியாக அவதானித்தார்.

அத்துடன், ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொண்டு தனக்கு வழங்குமாறு சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ். அரசாங்க அதிபர்
ஆகியோரை கேட்டுக் கொண்டார்.

மேலும், குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து அழிவுகளுக்கான நஸ்ட ஈட்டினை பெற்று தருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உறுதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் கொண்டுவருவது பாராட்டத்தக்க விடயமாகும்! செயலாளர் ந...
தீமையிலும் நன்மை காண்போம் - அசாதாரண சூழலையும் வெற்றி கொள்வோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கும் அமைச்சர்...