இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 28th, 2017

இறந்த உறவுகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஓர் உரிமை வாழ்வை உருவாக்கிக் கொடுப்பதேயாகும். இதுவே அர்த்தபூர்வமான அஞ்சலி மரியாதையாகும். அதற்காக உறுதியுடன் உண்மைவழி நின்று உழைப்போம். வலிகளையும் வதைகளையும் இரத்தப் பலிகளையும் சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிததுள்ளார்.

இன்றைய தினம் அனர்த்த முகாமைத்துவம், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை, தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

போலித்தனமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பவர்கள் உரிமைகளைப் பெறுவதற்காக கனிந்த வந்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்த மறுத்துவிட்டனர்.

அவர்களின் நோக்கம் மக்களின் துன்ப துயரங்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதேயாகும். உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் நல்லெண்ணமும் கொண்டு நல்ல பாம்பு வேசம் போட்டு நடிக்கின்றார்கள்.

யார் அழிய வேண்டும் என்று உள்ளார விரும்பினார்களோ அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார் என்று மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Untitled-1 copy

Related posts:


பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - டக்ளஸ் தேவானந்தா சபையில் வலிய...
குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் செயல...
நயினாதீவில் புதிய மின் பிறப்பாக்கி - குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!