வரவு செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்காக ஒலித்த குரல் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, February 19th, 20172017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது இடம்பெற்ற விவாதங்களில் இலங்கையின் சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் வகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியே சிறந்த பங்களிப்புகளை செய்துள்ளது வலைத்தள அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை குறித்த வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது ஜே.வி.பி கட்சி சிறந்த பங்களிப்புகளை செய்துள்ளதாகவும் வலைத்தள அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்முறை வரவு செலவு திட்ட விவாதத்தின் போது அதிகம் உரையாற்றிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் ஜே.வி.பி கட்சியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், முதல் இடத்தில் அனுர குமார திஸாநாயக்க, முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிமல் ரத்நாயக்க உள்ளனர்.
இந்த வரிசையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நான்காவது இடத்தை பெற்றுள்ளதுடன் பெற்றுக் கொண்டதுடன் இலங்கையின் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அனுர குமார திஸாநாயக்க,விவசாயம்,கால்நடை, மீன்பிடி, ஆட்சி, நிர்வாக மற்றும் நாடாளுமன்ற விவகாரம், நீதி, பாதுகாப்பு மற்றும் அமைதி, தேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு, வர்த்தக கைத்தொழில், பொருளாதார மற்றும் நிதித்துறை உள்ளடங்கிய 353 சந்தர்ப்பங்களில் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரப்படுத்தல் விபரம்….
Related posts:
|
|