வரவு செலவுத் திட்டத்தைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை மாற்றப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி !

Tuesday, April 3rd, 2018

நேரடி வரிகளை அதிகரிப்பதற்கான தேவை அரசுக்கு இருக்க முடியும். அதனை அறவிடுவதற்காக அதற்குரிய திணைக்களத்தில் அதிகாரிகள் இருந்தும், பெருந்தொகையிலான வரிகளைச் செலுத்தாமல் அதிலிருந்து தப்பித்துக் கொள்கின்ற பலர் இருந்தும், அத்தகையவர்களை விட்டுவிட்டு, சாதாரணமாக குறைந்தளவில் வரிகள் செலுத்தாதவர்களுக்கு எதிராக இந்த அதிகாரிகளில் பலரும் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை, தொடர்ந்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளாகும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான  விவாதம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்  –

எனவே, பெருந் தொகையில் வரி ஏய்ப்புக்களை மேற்கொண்டு வருவோரிடமிருந்து உரிய வரிகளை அறவிட உறுதியானதும், பலமானதுமான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், அனைத்துப் பொருட்களுக்கும் அதிகளவிலான வரிகளை அறவிட்டு, எமது மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டி இருக்காது.

அதே நேரம் எமது வரிகள் அறவீட்டு முறையினையும் தற்காலத்திற்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் இருக்கின்றது. அதாவது, பொது மக்களை அச்சுறுத்தி வரிகளை அறவிடாமல், மக்கள் தங்களது விருப்பின் பேரில் முன்வந்து வரிகளைச் செலுத்தக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும். அந்த நிலை இங்கே இல்லை. வரவு – செலவுத் திட்டம் என்றாலே மக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமையே எமது நாட்டில் இன்னமும் நடைமுறையில் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடு என்பது தற்போது எப்பொருளுக்கும் நடைமுறையில் இல்லாத நிலைமையே தொடர்கின்றது. அரசு அதிக விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தாவிட்டால், தங்களால் குறைந்த விலையில் தொகை விற்பனை செய்வதில் எவ்விதப் பயனும் இல்லை என்றே அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Related posts:

வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் - நா...
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்ப...
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...

வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...
முறைகேடுகளுக்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்தது கிடையாது – முன்பள்ளி ஆசிரியர் மத்தியில் டக்ளஸ் எம்.பி...