வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளை  காப்பாற்ற வேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, November 15th, 2017

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தீவுப் பகுதிகளில் – குறிப்பாக நெடுந்தீவு கடலரிப்பிற்கு உட்பட்டு வருகின்றது. அதே நேரம், வடக்கின் பல பகுதிகள் உவர் நீர் உட்புகுதலுக்கு ஆட்பட்டுள்ளன. எனவே, இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் அவசியமானதும் அவசரமானதுமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒலுவில் பகுதி கடலரிப்பு தொடர்பில் நான் ஏற்கனவே இச் சபையின் ஊடாக அரசின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். உடனடி தீர்வுகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால்,,. ஒன்றுமே நடந்தபாடில்லை!

மேலும், மர அணில், மீன் பிடிக்கும் பூனை, அளுங்கு போனற அழிவடையும் நிலையிலுள்ள உயிரினங்களைப் பாதுகாப்பது தொடர்பில் வரவு – செலவுத் திட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, தற்போது பாரிய அழிவு நிலைக்கு உட்பட்டு வருகின்ற, வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளையும் காப்பாற்ற வேண்டியுள்ளதை இந்த அரசு மறந்துவிடக்கூடாது.

யாழ்ப்பாணத்திற்கு நவீன பொருளாதார மையம், கிளிநொச்சிக்கு பண்டகசாலை போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. எனினும் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேர்ந்த கதி இவற்றுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: